முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம், உடல்நலக்குறைவால் காலமானார்

Coimbatore DMK Death
By Irumporai Oct 12, 2022 03:10 AM GMT
Report

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் காலமானார். உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோவை தங்கம் சிகிச்சை பலனின்றி காலமானார்.

2011 ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆறுமுகத்திடம் வெற்றி வாய்ப்பை இழந்தார் கோவை தங்கம்.

முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம், உடல்நலக்குறைவால் காலமானார் | Former Mla Coimbatore Thangam Passed Away

அதன் பின்னர் 2021ல் வால்பாறை சீட் அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு ஒதுக்கப்படாததால் தமாகவில் இருந்து விலகி சுயேட்ச்சையாக வால்பாறையில் களம் இறங்குவதாக அறிவித்தார். பின்னர் அந்த முடிவை கைவிட்டு திமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோவை தங்கம் சிகிச்சை பலனின்றி காலமானார்.  

கோவை தங்கம் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் :

மாற்று கட்சியில் இருந்த போதும், கழகத்தில் இணைந்த பின்பும் என எப்போதுமே அவர் ஏன் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருந்தவர், திரு கோவை தங்கம் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.