தமிழக மூத்த அரசியல்வாதி முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்..!
அதிமுகவின் மூத்த தலைவரான ஆர்.எம்.வீரப்பன் இன்று மருத்துவமனையில் காலமானார்.
ஆர்.எம்.வீரப்பன்
எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். தயாரிப்பாளராக எம்.ஜி.ஆர் pictures என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி, எம்.ஜி.ஆரின் மிக பெரிய வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.
நான் ஆணையிட்டால், இதயக்கனி, ரிக்ஷாகாரன் போன்ற மாபெரும் வெற்றி படங்களை கொடுத்தவர், பின்நாளில் எம்.ஜி.ஆர் அதிமுகவை துவங்கிய போது, அவருக்கு அவருடனே நீடித்தார்.
காலமானார்
அதிமுக உருவாக முக்கிய நபராக கருதப்படும் ஆர்.எம்.வீரப்பன்,1977 - 1986 வரை மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராகவும், 1986 இடைத்தேர்தலில், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் மற்றும்1991 இடைத்தேர்தலில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
சில ஆண்டுகள் கருத்து வேறுபாடு காரணமாக ஜெயலலிதாவுடன் முரணான போக்கை கொண்டிருந்த இவர், பின்னர் ஜெயலலிதா அமைச்சரவையில் முக்கிய நபராக இருந்தார்.
ஆனால், பின்நாளில் அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.எம்.வீரப்பன் தனியாக எம்.ஜி.ஆர் கழகம் என்ற கட்சியையும் நிறுவினார்.
வயதின் காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கிய அவர், உடல் நல பாதிப்பு ஏற்பட சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். மறைந்த அவருக்கு வயது 97 ஆகும்.