முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்ற காவல் - புழல் சிறையில் அடைப்பு

Sexual abuse case Former minister manikandan
By Petchi Avudaiappan Jun 20, 2021 04:29 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in அரசியல்
Report

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் அளித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றியதாகவும், கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாகவும் மணிகண்டன் மீது துணை நடிகை அளித்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 

இதனையடுத்து தலைமறைவாக இருந்த அவரை பெங்களூரில் தனிப்படை போலீசார் இன்று கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர்.

அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வைத்து மணிகண்டன் மற்றும் அவரது உதவியாளர்களிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

அதன்பின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழக்கை 

பாலியல் பலாத்தகாரம் என்ற அடிப்படையில் எடுத்தகொள்ள முடியாது, பெண்ணின் விருப்பத்துடன் தான் இருவரும் பழகி உள்ளனர், எனவே வழக்கின் பிரிவை மாற்ற சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து ஜூலை 2 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் அளித்து முன்னால் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.