சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது - ஜெயக்குமார்
ஜூன் 14-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்காக அனுமதி வழங்கக்கோரி அதிமுக சார்பில் டிஜீபி அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் கொரடாவைத் தேர்ந்தெடுக்க இந்தக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
சமீபத்தில் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் பேசிய ஆடியோ ஒன்று இணையதளத்திலும் ஊடகங்களிலும் வைரலானது. இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சசிகலா இல்லாமலே அதிமுக செயல்பட்டு வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசம் இல்லை.
மக்கள் அதிமுகவின் தலைமையை ஏற்றுக்கொண்டதற்கான சான்று தான் இது. அதிமுகவுக்கு புதிய பொதுச் செயலாளர் தேவையில்லை. ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் கட்சியை வழிநடத்துவார்கள்.
திமுக 39 எம்.பிக்களை வைத்துள்ள நிலையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்துக்கு உரிய தடுப்பூசிகளைப் பெற வேண்டும்” என்றார்.