என்ன செய்தாலும்... அது மட்டும் நடக்காது கண்ணா : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீனில் வெளிவந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்த அன்று கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக தொண்டரை அரை நிர்வாணமாக தாக்கியது, நில அபகரிப்பு வழக்கு ஆகியவை காரணமாக புழல் சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீனில் இன்று வெளிவந்தார்.
அவருக்கு அதிமுகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 25 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு புழல் சிறையில் இருந்து விடுதலையான ஜெயக்குமார் திமுக அரசுக்கு எதிராக முழக்கமிட்டு தனது எதிர்ப்புகளை தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், சமூக விரோதிகளுக்கு துணைப்போகும் தமிழக முதலமைச்சரை நாம் பெற்றிருப்பது துரதிஷ்டவசமானது என்றும், எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட அன்று 3 மணி நேரம் சென்னையை சுற்று காட்டியதாகவும், போலீஸ் ஸ்டேஷனுக்கோ, நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லவில்லை எனவும் தெரிவித்தார்.ஹிட்லர் முசோலினியின் மறுஉருவம் தான் ஸ்டாலின் எனவும், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக அரசின் உத்தரவை மதித்த சிறை நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் கழக முன்னோடிகள் மீது வழக்கு தொடர்ந்து அச்சுறுத்தி விடலாம் என மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால்