"அரசியலில் இனி ஓபிஎஸ் எதிர்காலம் ஜீரோ" : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளர் என்பதை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம்
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது.

இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
பொதுக்குழு செல்லும்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தா நிலையில் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அதிமுக பொதுக்குழு குறித்த தீர்ப்பினை வழங்கினர் அதன்படி அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு
இந்த உத்தரவு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான உத்தரவாக பார்க்கப்படும் நிலையில் செய்தியளார்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்று கூறினார், இந்த தீர்ப்பினை கழகத்தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த தீர்ப்பின் ஒற்றை தலமை வந்திருப்பது மகிழ்ச்சியான ஒன்றாகும் எனக் கூறினார். மேலும் ஓபிஎஸ் நீக்கம் செல்லும் என்று கூறினார் அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள் இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் கண்ணாமூச்சி ஆட்டம் போல உள்ளதே என்று கேட்க .

கண்ணாமூச்சி ஆட்டம் நாங்கள் ஆடவில்லை அது ஓபிஎஸ் தரப்பிற்குதான் தெரியும் எங்களுக்கு சட்டப்படி தர்மம் நியாயம் வென்றுள்ளது என்றும் அரசியலில் இனி ஓபிஎஸ் எதிர்காலம் ஜீரோதான் எனக் கூறியுள்ளார்.