பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர்.. சட்டம் தன் கடமையை செய்யும்.. காவல் ஆணையர்
police
manikandan
exminister
By Irumporai
அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மணிகண்டன்நடிகை சாந்தினியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னை கட்டாயப்படுத்தி கருகலைப்பு செய்ய வைத்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
இந்த சம்பவம் சாந்தினி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருநதார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் :
"முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் புகார் தொடர்பாக போதுமான ஆதாரம் உள்ளது.
அவரது முன் ஜாமீன் மனுவை கடுமையாக எதிர்ப்போம். புகார் கொடுத்த நடிகையை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் போதுமான ஆதாரம் உள்ளதால் சட்டம் தன் கடமையை செய்யும் என கூறினார்.