முன்ஜாமீன் மனு தள்ளுபடி: அன்பில் மகேஷ் அதிரடிக் கைது
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் DTCP, CMDA உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ. 100 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாகப் பதிவான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்னையில் கைது செய்துள்ளனர்.
அன்பில் மகேஷ் கைது
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளிடம் சட்டவிரோதமாகப் பணம் வசூலித்ததாக, அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறையின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து மனுவைத் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.