அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் - வீடியோ செய்தி
திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி 19-ந் தேதி தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுகவைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை அரைநிர்வாணமாக்கி தாக்கியதாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிய பட்டது. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 20-ம் தேதி ஜெயக்குமார் அதிரடியாக கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு நிபந்தனைகளை விதித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் இரண்டு வாரங்கள் கையெழுத்திடவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.