ரத்த வெள்ளத்தில் கிடந்த முன்னால் டிஜிபி; வாட்ஸ் அப் பதிவு - மனைவி, மகள் கைது
முன்னாள் டிஜிபி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவருடைய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் டிஜிபி மரணம்
பிகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். இவர் கர்நாடகா மாநில டிஜிபியாகவும் பணியாற்றியிருந்தார். இந்நிலையில், பெங்களூரில் தென்கிழக்கு எச்.எஸ்.ஆர்.லே அவுட் பகுதியில் உள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
உடனே தகவலறிந்து விரைந்த போலீஸார், ரத்த கறைகள் படிந்திருந்ததால் ஓம் பிரகாஷின் மனைவி பல்லவி, குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
அதில் ஓம் பிரகாஷின் மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் 10 முறை கத்தியால் அவரது மனைவி பல்லவி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவர்களது மகள் உதவியாக இருந்துள்ளார். தற்போது இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், இருவரையும் கைது செய்துள்ளனர்.
மனைவி கைது
முன்னதாக, கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஐபிஎஸ் அதிகாரிகள் குடும்பத்தினர் இருக்கும் வாட்ஸ் ஆப் குரூப்பில் பல்லவி ஒரு தகவலை தெரிவித்துள்ளார். அதில், "ஓம் பிரகாஷ் வீட்டில் துப்பாக்கியுடன் சுற்றுகிறார். எந்த நேரத்திலும் அவர் என்னை கொல்ல வாய்ப்புள்ளது" எனக் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகளாகவே கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. மேலும், அடிக்கடி சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.