பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர்; காங்கிரஸில் இணைந்தார் - பரபரப்பு!

Indian National Congress BJP Karnataka
By Sumathi Apr 17, 2023 04:00 AM GMT
Report

கர்நாடகா முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

ஜெகதீஷ் ஷெட்டர் 

கர்நாடக சட்டசபைக்கு வரும் மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் கட்சியான பாஜக 212 தொகுதிகளுக்குதான் வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது. கட்சியில் பல முக்கிய தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக மேலிடம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர்; காங்கிரஸில் இணைந்தார் - பரபரப்பு! | Former Karnataka Cm Jagadish Shettar Join Congress

கட்சியின் மூத்த தலைவர்கள் ஈசுவரப்பா, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர் லட்சமண் சவதி போன்றவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால், பாஜகவில் இருந்து விலகுவதாக நேற்று ஜெகதீஷ் ஷெட்டர் அறிவித்தார். தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.

பாஜகவில் விலகல்

இந்நிலையில், முன்னதாக ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சித்தராமையா கூறியிருந்த நிலையில், அவர் காங்கிரஸில் இணைந்தார். இவருக்கு, உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் போட்டியிட வாப்பு அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

ஜெகதீஷ் ஷெட்டர் எங்களிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. நாங்களும் அவருக்கு எதையும் கொடுப்பதாக கூறவில்லை என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.