இந்திய கிரிக்கெட் வீரர் உடல்நலக்குறைவால் திடீர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.
பிஷன் சிங் பேடி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் பிஷன் சிங் பேடி (77). இவர் பஞ்சாபி மாநிலம் அமிர்தசரசை சேர்ந்தவர். இடத்து கை சுழற்பந்து வீச்சாளரான பிஷன் சிங் 1967ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.
1975ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில்,12 ஓவர்களில் 8 மெய்டன்கள் செய்து 6 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி பிஷன் சிங் பேடி கவனம் பெற்றார். இதுவரை இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டுகளையும், 370 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 1560 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
காலமானார்
அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் மேலாளராகவும், தேர்வுக்குழு உறுப்பினராகவும் பிஷன் சிங் பேடி பணியாற்றியுள்ளார். கடந்த 1970ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு த்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
இந்நிலையில் சமீப காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிஷன் சிங் பேடி நேற்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலர் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.