‘’ என்னப்பா இது PREPAID-ல இருந்து POSTPAID-க்கு மாறுன மாதிரி ’’ - ரிஷப் பண்டினை பங்கம் செய்த முன்னாள் வீரர்!

rishabhpant deepdasgupta pragyanojha
By Irumporai Jan 11, 2022 08:56 AM GMT
Report

ரிஷப் பந்தின் பேட்டிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

இதனை அடுத்து ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இரு அணிகளும் தலா 1 வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமமாக உள்ளன.

‘’ என்னப்பா இது PREPAID-ல இருந்து POSTPAID-க்கு மாறுன மாதிரி ’’ - ரிஷப் பண்டினை பங்கம் செய்த முன்னாள் வீரர்! | Former India Spinners Hilarious Postpaid

அதனால் இன்று (11.01.2022) நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை கைப்பற்றும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.   

இந்த நிலையில் ரிஷப் பந்தின் ஷாட் குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா விமர்சனம் செய்துள்ளார். அதில், 'ரிஷப் பந்த் அடித்த ஷாட்டை பார்க்கும்போது பிரீபெய்ட் சர்வீசில் இருந்து போஸ்ட்பெய்ட் சர்வீசுக்கு மாறி வருவது போல் இருந்தது' என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

‘’ என்னப்பா இது PREPAID-ல இருந்து POSTPAID-க்கு மாறுன மாதிரி ’’ - ரிஷப் பண்டினை பங்கம் செய்த முன்னாள் வீரர்! | Former India Spinners Hilarious Postpaid

நேற்று செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் விராட் கோலியிடம் ரிஷப் பந்தின் மோசமான ஆட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ஒவ்வொரு வீரருக்கும் மோசமான காலகட்டம் என்பது வரும், அதிலிருந்து மீண்டுவர கால அவகாசம் கொடுக்க வேண்டும் என ரிஷப் பந்துக்கு ஆதரவாக கோலி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.