முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரியின் மனைவி, மகன் கைது..!

By Thahir Apr 19, 2023 10:02 AM GMT
Report

முன்னாள் ஐ.எப்.எஸ் அதிகாரி வெங்கடாச்சலம் லஞ்சம் வாங்கிய பணத்தில் தனது மகன் மற்றும் மனைவி பெயரில் சொத்து சேர்த்து வைத்த நிலையில் இருவரையும் ஒழிப்புத்துறை கைது செய்யப்பட்டனர்.

அதிகாரி தற்கொலை

ஐ.எப்.எஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றபின் தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்தவர் வெங்கடாச்சலம், இவர் 2013 முதல் 2021 வரை பொறுப்பில் இருந்தார்.

அந்த சமையத்தில் அவர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்த பொழுது, கணக்கில் காட்டப்படாத 11 கிலோ தங்கம், 13.5 லட்சம் ரொக்கப்பணம், 15 கிலோ எடையுள்ள சந்தனக்கட்டைகள், மற்றும் சில சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரியின் மனைவி, மகன் கைது..! | Former Ifs Officer S Wife Son Arrested

அப்பொழுது அவர் வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது.

மனைவி, மகன் பெயரில் சொத்து சேகரிப்பு

மேலும் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை செய்ததில் வெங்கடாசலம் தனது மகன் மற்றும் மனைவி பெயரில் கணக்கில் வராத சொத்துக்களை சேர்த்து இருப்பது தெரியவந்துள்ளது.

அதனால் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மற்றும் அவர், 2013 ஆம் ஆண்டில் 57 லட்சத்திற்கு சொத்துகளை வைத்திருந்ததாகவும் 2021 ஆம் ஆண்டில் வருமானத்தை விட 227% சொத்து சேர்த்திருப்பது ஆய்வின் போது தெரியவந்துள்ளது.

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/officer-hanged-anti-corruption-raid-end-investigation-wife-and-son-were இவை அனைத்தும் அவர் மாசு கட்டுப்பாடு வாரியத்தில் பணிபுரியும்போது சான்றிதழ் வழங்குவதற்காக லஞ்சமாக பெற்றதாத தெரியவந்துள்ளது.