சிபிஐ-யிடம் சிக்கிய ஆதாரங்கள்.. மருத்துவமனையின் முன்னாள் தலைவர் சஸ்பெண்ட்!
இந்திய மருத்துவர்கள் சங்கத்திலிருந்து ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முன்னாள் தலைவர் சந்தீப் கோஷ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தா
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கருத்தரங்கில் கடந்த 9 -ம் தேதி கன்னம், உதடு, மூக்கு, கழுத்து, கைகள் உடலில் காயங்களுடன் பெண் பயிற்சி மருத்துவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டதாகக் குற்றசாட்டுகள் எழுந்த நிலையில் இது தொடர்பாக மருத்துவமனை வளாகத்தில் தன்னார்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் பெண் பயிற்சி மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டும் , கன்னம், உதடு, மூக்கு, கழுத்து, கைகள் என உடலின் வெளிப் பகுதியில் 16 இடங்களிலும், கழுத்து தசை, உச்சந்தலை என உள் பகுதியில் 9 இடங்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
இடைநீக்கம்
மேலும் பிறப்பு உறுப்பில் இருந்த 151 கிராம் திரவம் மற்றும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. இதனையடுத்து கொல்கத்தாவில் போராட்டம் வலுத்து வரும் நிலையில் சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
தொடர்ந்து சஞ்சய் ராய் ,ஆர்.ஜி.கர் மருத்துவ மருத்துவமனையின் முன்னாள் மருத்துவர் சந்தீப் கோஷ் மற்றும் 5 மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் சந்தீப் கோஷிடம் சிபிஐ காவல்துறை நடத்திய விசாரணையில் அவர் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் சிக்கியதாகத் தகவல் வெளியான நிலையில் இந்திய மருத்துவர்கள் சங்கத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.