முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் நட்வர் சிங் காலமானார் - யார் இந்த நட்வர் சிங்?

Indian National Congress India
By Karthikraja Aug 11, 2024 04:39 AM GMT
Report

முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் நட்வர் சிங் காலமானார்.

நட்வர் சிங்

வயது முதிர்வு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நட்வர் சிங்(93), டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

natwar singh

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று(10..08.2024) இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, அவரது உடல் டெல்லிக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கேயே திங்கட்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வெளியுறவு துறை

இவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ராஜஸ்தான் மாநிலத்தின் பாரத்பூர் மாவட்டத்தில், 1931 ஆம் ஆண்டு பிறந்த நட்வர் சிங், 1951 ல் இந்திய வெளியுறவு பணிக்கு தேர்வாகி, 31 ஆண்டுகள் பல்வேறு நாடுகளில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார்.

இதன் பின் 1984 ல் தனது பணியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர், 1984 ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் பரட்புர் தொகுதியியல் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், இரும்பு, நிலக்கரி, சுரங்கம் மற்றும் விவசாயம் துறை அமைச்சராக பதவியேற்றார். அதன் பிறகு 1986 முதல் 1989 வரை வெளியுறவு துறை இணை அமைச்சராக பதவி வகித்தார்.              

அரசியல் 

ராஜிவ் காந்தி மறைவுக்கு பின் கட்சி தலைமையுடன் முரண்பட்டு, 1991 ல் அர்ஜுன் சிங் மற்றும் என்.டி.திவாரியுடன் இணைந்து அணைத்து இந்திய இந்திரா காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். 1998 ல் சோனியா காந்தி கட்சியின் தலைமைக்கு வந்ததும் காங்கிரஸில் கட்சியை இணைந்து கொண்டார். அதன் பின் 2002 ல் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ராஜ்யசபா க்கு தேர்வான இவர், 2004 ல் ஆட்சியமைத்த மன்மோகன் சிங் தலைமயிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் வெளியுறவு துறை அமைச்சராக பதவி வகித்தார். 

natwar singh with manmohan singh

27 அக்டோபர் 2005 அன்று அரசு பயணமாக வெளிநாட்டில் இருந்த போது இவர் மீது உணவுக்கான எண்ணெய் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதனையடுத்து 2006 ம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

2006 ம் ஆண்டு பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற இவர் தான் குற்றமற்றவர் என்றும், சோனியா காந்தி என்னை பாதுக்காக்க தவறி விட்டார் என்றும் குற்றம் சாட்டினார். இதனையடுத்து 2008 ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த இவர் 4 மாதங்களில் அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், நட்வர் சிங் 10 க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 1984 இல் இந்தியாவின் மூன்றாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷன் விருது இவருக்கு அளிக்கப்பட்டது.