முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்-ஹேசல் கீச் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது

baby boy yuvaraj singh becomes father new father hasel keech
3 மாதங்கள் முன்

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் நடிகை ஹேசல் கீச் தம்பதியினர் நேற்று அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தியை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தனர்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளதாவது,

“கடவுள் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையை ஆசிர்வதித்திருக்கிறார்.

இந்த நற்செய்தியை எங்கள் ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். இந்த குழந்தையை வரவேற்கும் அதேவேளையில் எங்கள் தனியுரிமையையும் மதிக்க விரும்புகிறோம்” என பதிவிட்டிருந்தார். 

யுவராஜ் மற்றும் நடிகை ஹேசல் கீச் நவம்பர் 30, 2016 அன்று ஃபதேகர் சாஹிப் குருத்வாராவில் பாரம்பரிய முறையில் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதியின் முதல் குழந்தை இது

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.