உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழப்புக்கு “நீட்” தேர்வு தான் காரணமா? - அதிர்ச்சி தகவல்
உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழந்ததற்கு மத்திய அரசை கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. முன்னதாக இதற்கான பணிகளில் இருந்த போது தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது 7வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்யப் படைகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் மக்களும், படை வீரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.
அந்த வகையில் கார்கிவ் நகருக்குள் ரஷ்ய ராணுவத்தினர் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவரும் உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்திய மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மக்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் உயிரிழந்த மாணவர் நவீன் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊடகத்திற்கு நவீனின் தந்தை அளித்துள்ள பேட்டியில் தனது மகன் 97% மதிப்பெண் பெற்றிருந்தும் இங்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சீட்டுக்காக கோடிக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறது.
ஆனால் உக்ரைன் போன்ற வெளிநாடுகளில் இதே படிப்புக்கு குறைவான செலவில் கற்றுத் தரப்படுகிறது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழந்ததற்கு நீட் தேர்வே காரணம் என கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி விமர்சித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த கிராமப்புற மாணவர்களுக்கு அநீதி இழைக்கும் நீட் தேர்வின் வெட்கமற்ற முகத்தின் பிரதிபலிப்பே உக்ரைனில் ஷெல் தாக்குதலில் பலியான மருத்துவ மாணவர் நவீனின் சோகமான மரணம். நவீன் எஸ்.எஸ்.எல்.சியில் 96 சதவீதமும், பியூசியில் 97 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
NEET-National Eligibility and Entrance Test, is shattering dreams of middle class and the poor of studying medical education. NEET has become a Death Statue for the parents and students. Higher education is being reserved just for the haves while denying for the have-nots. 1/11
— H D Kumaraswamy (@hd_kumaraswamy) March 2, 2022
இந்தியாவில் நன்றாகப் படித்த மாணவன் நவீனுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. தனது மருத்துவ கனவை நிறைவேற்றவே நவீன் உக்ரைன் சென்றார். வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பெறும் 90% மாணவர்கள் இந்தியாவில் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைகிறார்கள் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் கருத்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மருத்துவக் கல்விக்கான செலவை ஒப்பிட்டுப் பேசுவதற்கு இது நேரமில்லை.
பயிற்சிகளுக்குப் பின்னால் இருப்பது யார்? இவர்களுக்கு மத்திய அரசு ரகசிய ஆதரவா? நீட் தேர்வால் கல்வி அராஜகத்தால் இன்னும் எத்தனை மாணவர்கள் இறக்க வேண்டும்? என சரமாரியாக விமர்சித்துள்ளார்.