கர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குண்டுகட்டாக கைது - தடுப்புக்காவலில் அடைப்பு

Karnataka
By Thahir Mar 04, 2023 06:32 AM GMT
Report

கர்நாடாக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குண்டுகட்டாக கைது செய்யபட்டார்.

பாஜக எம்எல்ஏ மாதல் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மாதல். இவர் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக லோக் ஆயுக்தாவின் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் பிரசாந்த் மாதலை கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து, அவரது அலுவலகம் மற்றும் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், ரூ.7.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

சித்தராமையா கைது 

இந்த நிலையில், மகன் லஞ்சம் வாங்கி விவகாரத்தில் பாஜக எம்எல்ஏ மாதல் விருபக்ஷாவை கைது செய்யக்கோரி பெங்களூரில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா போராட்டம் நடத்தினார்.

Former Chief Minister Siddaramaiah arrested

இதனை போலீஸ் தடுத்து நிறுத்திய நிலையில், காங்கிரஸ் கட்சியினருடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய சித்தராமையாவை போலீசார் அழைத்து சென்றனர்.