மாயமான டொனால்ட் ட்ரம்ப் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?

America Donald Trump
By mohanelango Jun 03, 2021 09:49 AM GMT
Report

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இருந்தது நான்கு ஆண்டுகள் தான். ஆனால் நான்கு ஆண்டுகளில் இதுநாள் வரை எந்த அமெரிக்க அதிபரும் சந்திக்காத சர்ச்சைகளுக்கு உள்ளானார் ட்ரம்ப்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் ஜோ பைடனால் ட்ரம்ப் தோற்கடிப்பட்டார். ஆனால் தேர்தல் முடிவுகளை ட்ரம்ப் இன்று வரை ஏற்றுக்கொள்ளவில்லை.

ட்ரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறை வெறியாட்டம் நடத்தினார். இறுதியில் ஜோ பைடன் வெற்றிகரமாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.

அதனைத் தொடர்ந்து ட்ரம்ப்பின் அனைத்து சமூக ஊடக கணக்குகளும் அந்தந்த நிறுவனங்களால் முடக்கப்பட்டன. ட்ரம்ப்பின் கணக்குகளை இனி எப்போதும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அறிவித்துவிட்டன.

மாயமான டொனால்ட் ட்ரம்ப் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? | Former American President Donald Trump

நாடாளுமன்றத்தில் வன்முறையைத் தூண்டினார் என ட்ரம்ப் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. ட்ரம்ப் 2024-ல் நடைபெறும் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் எனத் தெரிவித்து வந்தார். 

சமூக ஊடகங்களில் முடக்கப்பட்டதால் ட்ரம்ப் தனக்கென தனியாக ஒரு வலைத்தளத்தை கடந்த மாதம் உருவாக்கினார். இதன் மூலம் தொடர்ந்து இயங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடங்கிய ஒரு மாதத்திற்குள்ளே அதனை தற்போது மூடிவிட்டார் ட்ரம்ப்.

இனி ட்ரம்ப்பின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும் என அவருடைய ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தோல்விக்குப் பிறகு அதிகமாக பொதுவெளியில் தலைகாட்டாத ட்ரம்ப் ஃப்ளோரிடாவில் உள்ள அவருடைய அப்பார்ட்மண்டில் வசித்து வருகிறார்.