முன்னாள் அதிமுக அமைச்சருக்கு 5ஆண்டு சிறை : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

AIADMK Indrakumary jailed5years
By Irumporai Sep 29, 2021 06:53 AM GMT
Report

அதிமுக அரசின் முன்னாள் அமைச்சர் இந்திராகுமாரிக்கு 5ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1991 - 1996ஆம் காலகட்டத்தில் அதிமுக அரசின் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி கணவர் அறக்கட்டளை ஆரம்பித்து அதன் மூலம் மாற்றுத்திறனாளிக்கான பள்ளி நடத்தி வருவதாக சொல்லப்பட்டது.

இதில் அரசின் பணம் 15 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் முறைகேடாக பெற்றிருப்பதாகவும், பள்ளியை நடத்தாமல் நடத்துவதாக கூறி அரசிடம் பணம் பெற்று மோசடி செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டில் சமூக நலத்துறை 1997ஆம் ஆண்டில் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் நீதிமன்றத்தில் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.இதில் ஐந்து பேரில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இருந்தார்கள். இதில் மூன்று நபர்கள் குற்றவாளிகள் என்று தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அதிமுக அமைச்சருக்கு 5ஆண்டு சிறை : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி | Former Aiadmk Minister Jailed For 5 Years

முதல் குற்றவாளியாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் இந்திராகுமாரியும், அடுத்ததாக அவருடைய கணவர் பாபுவும், மற்றொரு குற்றவாளியாக அரசு அதிகாரி சண்முகம் உடந்தையாக இருந்தார் என்ற அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான தண்டனை விவரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் இந்திரகுமரிக்கும், அவரின் கணவர் பாபுவுக்கு 5ஆண்டு சிறை தண்டனையும், IAS அதிகாரி சண்முகத்துக்கு 3ஆண்டும் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இருக்கக்கூடிய கிருபாகரன் என்பவர் இறந்து விட்டதால் அவருக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் இந்த வழக்கில் வெங்கட கிருஷ்ணன் என்பவர் குற்றம் சாட்டபட்டு இருந்தார். அவரை நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.முன்னாள் அமைச்சரான இந்திரகுமாரி தற்போது திமுகவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.