அதிமுக ஆட்சியில் கொரோனா கட்டுக்குள் இருந்தது - முன்னாள் அமைச்சர்கள்

Stalin Sellur raju Udhayakumar
By mohanelango May 27, 2021 11:40 AM GMT
Report

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்படவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு குற்றச்சாட்டு

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் தேனி எம்.பி ரவீந்திரநாத் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில் "மதுரையில் கொரோனா பரவல் அசுர வேகத்தில் உள்ளது. 7 ஆம் தேதிக்கு பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும், நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா கட்டுக்குள் வைக்கப்பட்டது. பாரபட்சம் பார்க்கலாம் தடுப்பூசி வழங்க வேண்டும். முதல் அலையின் போது உணவுகள் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்பட்டது" எனக் கூறினார்.

அதிமுக ஆட்சியில் கொரோனா கட்டுக்குள் இருந்தது - முன்னாள் அமைச்சர்கள் | Former Admk Ministers Press Meet Madurai

பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில் "மதுரையில் கொரோனா புயல் வேகத்தில் பரவி வருகிறது, பரவலுக்கான காரணத்தை தமிழக அரசு கண்டறிய வேண்டும். உயர் அதிகாரிகளை மாற்றியதால் கொரைனா பணிகளில் தொய்வு, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் 3 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, மதுரைக்கு அதிக நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அம்புலன்ஸ் இல்லாமல் கொரைனா நோயாளியை சரக்கு வாகனத்தில் ஏற்றி வரும் அவலநிலை உள்ளது.

தமிழக அரசு மத்திய அரசோடு முரண்படமால் இணக்கமாக சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். படுக்கை வசதிகளுக்கு ஏற்ற மருத்துவர், செவிலியர் இல்லை. தமிழக அரசு வெளிப்படை தன்மையோடு செயல்படவில்லை, 6 வது முறையாக ஆட்சிக்கு வந்த திமுக புதிய அரசு என சொல்ல முடியாது" எனக் கூறினார்