கள்ளக்குறிச்சி கலவரம் : சிறப்பு புலனாய்வு குழு அமைக்க டிஜிபி உத்தரவு

Kallakurichi School Death Kallakurichi
By Irumporai Jul 19, 2022 09:45 AM GMT
Report

கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தொடர்பாக, நேற்று முன்தினம் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

கலவரமான கள்ளக்குறிச்சி

இதில் மாணவி படித்த தனியார் பள்ளி, வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதனால் பள்ளி வளாகம் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கள்ளக்குறிச்சி கலவரம் :  சிறப்பு புலனாய்வு குழு அமைக்க  டிஜிபி உத்தரவு | Formation Of Special Investigation Kallakurichi

இந்த போராட்டத்தால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

கலவரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.டிஐஜி பிரவீன் குமார் அபிநவ் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.