எதையும் மறக்க விரும்பல, நான் சிக்க விரும்பல: ரகசியம்சொன்ன சம்ந்தா

Samantha
By Irumporai Apr 11, 2023 06:25 PM GMT
Report

குணசேகர் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் சாகுந்தலம் படம் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தை விளம்பரம் செய்து வருகிறார் சமந்தா.

சாகுந்தலம் சமந்தா

படம் தொடர்பாக பேட்டிகளும் அளிக்கிறார். அந்த பேட்டிகளில் தனக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையேயான திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது பற்றியும் பேசி வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கடந்த கால அனுபவங்களில் எதையாவது மறக்க விரும்புகிறீர்களா என சமந்தாவிடம் கேட்கப்பட்டது. என் கடந்த கால ரிலேஷன்ஷிப் பற்றி கேட்கிறீர்களா என பதிலுக்கு கேள்வி கேட்டார் சமந்தா. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று பேட்டி எடுத்தவர் கூறினார்.

எதையும் மறக்க விரும்பல, நான் சிக்க விரும்பல: ரகசியம்சொன்ன சம்ந்தா | Forget Anything Samantha Nagasaithanya

கடந்த காலம் 

அதற்கு சமந்தா கூறியதாவது, நீங்கள் என்னை வம்பில் சிக்க வைக்கிறீர்கள். நான் எதையுமே மறக்க விரும்பவில்லை. ஏனென்றால் அனைத்துமே எனக்கு ஏதாவது பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதனால் மறக்க விரும்பவில்லை என்றார். சமந்தா பொதுவாக பதில் அளித்தாலும் அவர் நாக சைதன்யாவுடன் வாழ்ந்தது பற்றி தான் பேசியிருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்