ரோந்து சென்ற வேட்டை தடுப்பு காவலர்களை யானை துரத்தியதில் ஒருவர் உயிரிழப்பு

Coimbatore
By Swetha Subash Apr 21, 2022 02:57 PM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

வால்பாறையில் வனப்பகுதியில் ரோந்து சென்ற வேட்டை தடுப்பு காவலர்களை காட்டுயானை துரத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் தொகுதிக்கு உட்பட்ட வால்பாறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாய்முடி எஸ்டேட் பகுதியில் சுற்றித் திரிந்த புலி ஒன்றை வனத்துறையினர் வலை வீசிப் பிடித்து, வால்பாறை அருகே உள்ள மானாம்பள்ளி வனச்சரகத்தில் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.

இதையடுத்து வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் சந்திரன் மந்திரி மட்டம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்,அப்போது வனப்பகுதி விட்டு வெளியே வந்த ஒற்றை காட்டு யானை மூன்று பேரையும் துரத்தியது.

இதில் மூன்று பேரும் திசைமாறி சென்றுள்ளனர்,காட்டின் குறுக்கு பகுதியில் சென்ற சந்திரன் மரத்தின் வேர் காலில் பட்டு நெஞ்சில் அடிபட்டது.

ரோந்து சென்ற வேட்டை தடுப்பு காவலர்களை யானை துரத்தியதில் ஒருவர் உயிரிழப்பு | Forest Ranger In Anaimalai Died After Elephant

அவரை தேடிவந்த நண்பர்கள் சந்திரனை தூக்கிக்கொண்டு வனப்பகுதி விட்டு வெளியே சென்று வால்பாறை அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சந்திரன் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.

காட்டு யானை துரத்தி வேட்டை தடுப்பு காவலர் உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.