வனத்துறையினரை விரட்டி விரட்டி துரத்திய விவசாயிகள்..தலை தெரிக்க ஓடிய வனத்துறையினர்!
தெலுங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் பயிர் செய்வதற்காக உழுத விவசாயிகளை தடுக்க சென்ற வனத்துறையினரை விவசாயிகள் விரட்டி விரட்டி துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டத்திலுள்ள மடக்கூடம் கிராமம் சமீபத்தில் இருக்கும் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை டிராக்டர் மூலம் உழுத விவசாயிகள் அதில் பயிரிடுவதற்கான ஆயத்த பணிகளை செய்து வந்தனர் அப்போது அங்கு வந்த வனத்துறையினர் விவசாயிகளை தடுத்து நிறுத்தி வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை அவர்களிடமிருந்து மீட்க முயன்றனர்.
இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள்,பெண்கள் ஆகியோர் கட்டைகளை கையில் ஏந்தி வனத்துறையினரை விரட்டியடித்தனர்.இதனால் பயந்துபோன வனத்துறையினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இந்த நிலையில் வனத்துறையினர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த சிஆர்பிஎப் போலீசார், காவல்துறையினர் ஆகியோர் துப்பாக்கி முனையில் விவசாயிகளை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் காரணமாக மெகபூபாபாத் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.