கங்கையில் அரைகுறை ஆடையுடன் குளித்த வீடியோ - கடும் எதிர்ப்பு

Viral Video Uttar Pradesh
By Sumathi Dec 29, 2025 02:31 PM GMT
Report

கங்கையில் அரைகுறை ஆடைகளுடன் குளித்த வெளிநாட்டினரை திருப்பி அனுப்பினர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காசி, இந்துக்களின் புனித நகரமாக விளங்குகிறது. உலகெங்கும் பல்வேறு நாடுகளில் வாழும் இந்துக்களும் கங்கையில் குளித்தால் பாவங்கள் கரைந்து,

கங்கையில் அரைகுறை ஆடையுடன் குளித்த வீடியோ - கடும் எதிர்ப்பு | Foreigners Bathing In Kashi Viral Video

முக்தி கிடைக்கும் என நம்புகின்றனர். இந்நிலையில், காசிக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர், கங்கையில் குளிக்கத் தயாராகினர்.

அரை குறை ஆடைகளுடனும், கிறிஸ்துமஸ் தாத்தா உடையுடனும் இறங்க முற்பட்டவர்களை அங்கிருந்தவர்கள் எச்சரித்து அனுப்பினர்.

இந்த சம்பவத்தால் காசி கங்கைக்கரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிரறது.