இலங்கையில் ராமாயண இடங்களில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த இந்தியா ஆதரவு – வெளியுறவு செயலர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா

srilanka foreign secretary ramayana
By Irumporai Oct 05, 2021 09:58 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்து இரு நாடுகளின் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

நான்கு நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன், கொழும்பில் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை நேற்று சந்தித்து பேசினார்.

இது குறித்து ஹர்ஷவர்தன் கூறியதாவது இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா, இந்தியாவும் இலங்கையும் பொருளாதார குட்டுறவை வலுப்படுத்தவும்.

பரஸ்பர நன்மை, பரஸ்பர புரிதல் மற்றும் நல்ல அண்டை நாடுகளின் உறவுகளால் வரையறுக்கப்பட்ட பொதுவான நோக்கத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தவும் ஒன்றாக வேலை செய்வது முக்கியம் என்று கூறினார்.

மேலும்,  இலங்கையில் ராமாயணத்துடன் தொடர்புடைய தளங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்ரீகர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் இந்திய அரசு ஆதரவளிக்கும் என்று கூறினார். 

இந்த நிலையில் இலங்கை படையினரின் பயங்கரவாத தடுப்பு கூட்டு பயிற்சி நேற்று துவங்கியது.

இலங்கையின் கிழக்கு மாவட்டமான அம்பாராவில் 12 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சியில் இந்திய ராணுவ அதிகாரி பிரகாஷ் குமார் தலைமையில் 120 ராணுவ வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 'மித்ர சக்தி' என்ற இந்த கூட்டு பயிற்சி திட்டம், எட்டாவது முறையாக தற்போது நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.