ஐபிஎல் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்... இந்த வீரர்கள் பங்கேற்பதாக தகவல்
ஐபிஎல் தொடரில் கொரோனா காரணமாக வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில் தற்போது மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக பாதியிலேயே தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனை அடுத்து மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இதனிடையே வீரர்களின் பாதுகாப்பு காரணமாக இங்கிலாந்து மற்றும் வங்கதேச வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சோகம் அடைந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாக நியூசிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.