தாய்நாட்டை பிரிந்து வெளிநாட்டில் வசிப்பவர்களின் பட்டியல்: எந்த நாடு முதலிடத்தில்?
ஒரு நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வசிப்பவர்களின் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் வெளியிட்ட கணக்கீட்டின் படி, சுமார் 1 கோடியே 80 லட்சம் இந்தியவர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இதைத்தொடர்ந்து மெக்சிகோ, ரஷ்யா நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
இந்த வரிசையில் சீனாவில் பிறந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாகும், சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 80 லட்சமாக உள்ளது.
இந்நிலையில் உலக நாடுகளில் பெரும்பாலானோரை ஈர்க்கும் நாடாக அமெரிக்கா திகழ்வதாகவும், 2020-ம் ஆண்டில் 5 கோடியே 10 லட்சம் பேர் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.