இழுத்து மூடப்படும் பிரபல போர்டு நிறுவனம் – பலர் வேலை இழக்கும் அபாயம்
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலைகளை மூட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2019ம் ஆண்டின் இறுதி முதல் கொரோனா உலகை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தாக்கத்தினால் உயிரிழப்புகள் அதிகமாக காணப்பட்டதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டது.

இதனால் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்ததால் ஆட்டோமொபைல் நிறுவனம் வேகமாக செயல்பட தொடங்கிய நிலையில் கொரோனா இரண்டாம் அலை தாக்கியது.
அதனை தொடர்ந்து ஜெனரல் மோட்டாரஸ், ஹார்லி டேவிட்சன் போன்ற நிறுவனங்கள் மூடப்பட்டதை தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலைகளை மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனி, ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளில் ஃபோர்டு நிறுவன ஆலைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவை அமல்படுத்துவதற்கு ஓராண்டு காலம் ஆகும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்தியாவில் ஏற்றுமதியின் மூலம் கார்கள் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

காரை ஏற்கனவே வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை அளிக்கப்படும். ஃபோர்டு வாகன உற்பத்தி ஆலை மூடப்பட்டால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகும் என கூறப்படுகிறது. ஃபோர்டு வாகன உற்பத்தி ஆலை மூடப்பட்டால் இந்தியாவில் சுமார் 4,000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.