காதலித்த பெண்ணுடன் கட்டாய திருமணம் - இளைஞர் எடுத்த விபரீத முடிவு!
தான் காதலித்த பெண்ணுடன் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டாய திருமணம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(27). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனது காதல் வாழ்க்கையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல நினைத்த அந்த பெண் ராதாகிருஷ்ணன்னிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்,ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
காதலித்த பெண்ணை திருமணம் செய்ய ராதாகிருஷ்ணன் மறுத்ததால் பெண்ணின் உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அவருக்கும் அந்த பெண்ணிற்கும் காவல் நிலைய வாசலில் உள்ள கோயில் ஒன்றில் போலீசார் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
விபரீத முடிவு
ஆனால், இதனை சற்றும் எதிர்பாராத ராதாகிருஷ்ணன் தனக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக கூறி, பெண்ணின் உறவினர் பெயர்களை குறிப்பிட்டு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது சாவுக்கு காரணமான அப்பெண்ணின் உறவினர்கள் ஐந்து பேரின் பெயர்களை குறிப்பிட்டு கடிதம் எழுதியா பின் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராதாகிருஷ்ணனின் உடலில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் அவரது கடிதத்தை கைப்பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.