சிறுவர்களை சாணம் உண்ணும்படி வறுபுறுத்தியவர்கள் கைது
தெலுங்கானாவில், மாட்டுச் சாணம் சாப்பிடும்படி சிறுவர்களை துன்புறுத்திய இருவரை, போலீசார் கைது செய்தனர். தெலுங்கானாவில் உள்ள மஹபூபாபாத் மாவட்டம் கந்தைபாலம் கிராமத்தில், சிறுவர்கள் இரண்டு பேர் தங்கள் நாய்க்குட்டியை தேடி அருகில் இருந்த மாந்தோப்பிற்குள் சென்றனர்.
அப்போது அங்கிருந்த காவலர்கள் சிறுவர்களைக் கண்டவுடன் அவர்கள் மாம்பழம் திருட வந்ததாக கருதி கண்மூடித்தனமாக தாக்கினர். அதன்பிறகு மாட்டுச் சாணத்தை உண்ணும்படி சிறுவர்களை வற்புறுத்தியதுடன், அவர்கள் உடல் முழுவதும் சாணம் பூசியுள்ளனர்.
இந்த சம்பவங்களை, அங்கிருந்த மேலும் இருவர்,'செல்போனில்" பதிவு செய்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.இதையடுத்து, சிறுவர்களை துன்புறுத்திய மாந்தோப்பு காவலர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.