உலகின் சக்தி வாய்ந்த டாப் 10 நாடுகள் - இந்தியாவிற்கு எந்த இடம்?
உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
வலிமையான நாடுகள்
2025 ஆம் ஆண்டின் உலகின் வலிமையான நாடுகளின் பட்டியலை பிரபல அமெரிக்கா பத்திரிக்கையான போர்ப்ஸ்(Forbes) வெளியிட்டுள்ளது.
உலகளாவிய மார்க்கெட்டிங் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமான WPP இன் ஒரு பிரிவான BAV குழுமம் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் ரீப்ஸ்டீன் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், US News & World Report உடன் இணைந்து இந்த பட்டியலை உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்கா முதலிடம்
தலைமைப் பண்பு, பொருளாதார செல்வாக்கு, அரசியல் அதிகாரம், பன்னாட்டு உறவு, ராணுவ பலம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த தரவரிசை பட்டியலை உருவாக்கியுள்ளதாக போர்ப்ஸ்(Forbes) தெரிவித்துள்ளது.
சக்தி வாய்ந்த டாப் 10 நாடுகள்
1.) அமெரிக்கா (America) - GDP 30.34 டிரில்லியன் டாலர், மக்கள்தொகை 34.5 கோடி
2.) சீனா (China) - GDP 19.53 டிரில்லியன் டாலர், மக்கள்தொகை 141.7 கோடி
3.) ரஷ்யா (Russia) - GDP 2.2 டிரில்லியன் டாலர், மக்கள்தொகை 8.4 கோடி
4.) யுனைடெட் கிங்டம் (UK) - GDP 3.73 டிரில்லியன் டாலர், மக்கள்தொகை 6.9 கோடி
5.) ஜெர்மனி (Germany) - GDP 4.92 டிரில்லியன், மக்கள்தொகை 8.54 கோடி
6.) தென் கொரியா (South Korea) - GDP 1.95 டிரில்லியன், மக்கள்தொகை 5.17 கோடி
7.) பிரான்ஸ் (France) - GDP 3.28 டிரில்லியன் டாலர், மக்கள்தொகை 6.65 கோடி
8.) ஜப்பான் (Japan) - GDP 4.39 டிரில்லியன் டாலர், மக்கள்தொகை 12.3 கோடி
9.) சவுதி அரேபியா (Saudi Arabia) - GDP 1.14 டிரில்லியன் டாலர். மக்கள்தொகை 3.39 கோடி
10.) இஸ்ரேல் (Israel) - GDP 550.91 பில்லியன் டாலர், மக்கள்தொகை 93.8 லட்சம்
இந்த பட்டியலில் 3.55 டிரில்லியன் டாலர் GDP மற்றும் 143 கோடி மக்கள்தொகையுடன் இந்தியா 12வது இடத்தில் உள்ளது. 5 வது பெரிய பொருளாதாரம், நான்காவது பெரிய ராணுவம், மக்கள் முதலிடம் இருந்தாலும் மற்ற காரணிகளால் இந்தியா டாப் 10 பட்டியலில் இடம் பெறவில்லை.