இந்தியா- நியூசிலாந்து டெஸ்ட்: 132 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரசியம்

By Fathima Dec 04, 2021 06:14 AM GMT
Report

132 ஆண்டுகளுக்கு பின்னர், ஒரே டெஸ்ட் தொடரில் 4 கேப்டன்கள் அணியை வழிநடத்தி வரும் சுவாரசியமான நிகழ்வு நடந்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் மும்பையில் நடந்து வருகிறது, இதில் டொஸ் வென்ற கோலி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

இதன்படி, நேற்று முதல் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்களை இந்தியா எடுத்துள்ளது.

இந்த போட்டியில் சுவாரசியமான நிகழ்வொன்று அரங்கேறியுள்ளது, அதாவது, 4 கேப்டன்கள் அணியை வழிநடத்தியுள்ளனர்.

அதாவது, முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன்களாக செயல்பட்ட ரஹானேவும், கேன் வில்லியம்சனும் காயம் காரணமாக விலக, 2வது டெஸ்டில் விராட் கோலியும், நியூசிலாந்து அணியை டாம் லதாமும் வழி நடத்தி வருகின்றனர்.

சுமார் 132 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது கடந்த 1889-ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது, அந்த தொடரில் 4 கேப்டன்கள் அணியை வழி நடத்தியது குறிப்பிடத்தக்கது.