குப்பை கொட்டுபவர்களுக்கு சூனியம் வைத்த வீட்டு உரிமையாளர் - இலங்கையில் பரபரப்பு..!
இலங்கையில் வீட்டின் அருகே குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக வீட்டு உரிமையாளர் சூனியம் வைத்ததாக அறிவிப்பு பலகை வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குப்பை கொட்டுபவர்களுக்கு சூனியம் வைத்த நபர்
இலங்கை யாழ்பாணம் நாச்சிமார் கோவிலடி பகுதியைச் சேர்ந்த ஒருவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டின் அருகே அப்பகுதி மக்கள் குப்பையை கொட்டி செல்வதாக கூறப்படுகிறது.
இதனால் பல துர்நாற்றம் வீசுவதால் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளார் அந்த நபர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் ஒரு பொம்மை ஒன்றையும், தகடு ஒன்றினையும் தனது வீட்டு வேலியில் கட்டியுள்ளார்.

மேலும் அதில் ஒரு விளம்பர பலகை ஒன்றை வைத்துள்ளார். அதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது வாகன விபத்து நிச்சயம் ஏற்படும். தயவு செய்து வீதிகளில் குப்பை போட வேண்டாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

குப்பை கொட்டுபவர்களை எச்சரிக்கும் விதமாக அவர் வைத்துள்ள இந்த விளம்பர பலகை அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.