காதல் ஒரு Butterfly ய போல வரும் .. மைதானத்தில் மலர்ந்த காதல் .. வைரலாகும் வீடியோ!
காதல் எப்படி வரும், எங்கே வரும், யார் மீது வரும் என்றெல்லாம் தெரியாது.அந்த வகையில் கால்பந்து வீரர் தனது காதலியிடம் காதலை மைதானத்தில் வெளிப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த 24 அணிகள் மற்றும் கனாடாவைச் சேர்ந்த 3 அணிகள் என மொத்தம் 27 அணிகள் பங்கேற்று விளையாடும்மேஜர் லீம் சாக்கர் கால்பந்து தொடர் நடந்து வருகிறது
இதில் தொடரின் ஒரு போட்டியில், மின்னிசோட்டா எஃப்.சி மற்றும் சான் ஜோஸ் எர்த்குவேக் ஆகிய அணிகள் நேற்று மோதின.
இந்த போட்டியின் முடிவில் 2-2 என இரு அணிகளும் தலா இரண்டு கோல்களை அடித்து போட்டி டிரா ஆனது.
இந்த நிலையில், போட்டி முடிந்தவுடன் மின்னிசோட்டா எஃப்.சி அணியைச் சேர்ந்த ஹஸ்ஸானி டாட்சன் ஸ்டீபன்சன் என்ற வீரர், அவரது காதலியிடம் ப்ரொபோஸ் செய்த வீடியோ வைரலாகி வருகின்றது.
அதில்,தன் காதலியின் முன்பு மைதானத்திலேயே மண்டியிட்ட ஹஸ்ஸானி, மோதிரத்தை பரிசளித்து தனது காதலியிடம் ப்ரொபோஸ் செய்தார்.
Footballer #HassaniDotson's on-field proposal for marriage in front of thousands of fans.
— editorji (@editorji) July 5, 2021
And she said yes! pic.twitter.com/pugwSeHIZa
வாரணம் ஆயிரம் சூர்யா போலதனது காதலை கூற மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாகப்படுத்த காதலை சொன்னவுடன் வெட்கபட்ட ஹஸ்ஸானி காதலி கட்டித்தழுவி காதலை ஏற்றுக்கொண்டார்.
ஹஸ்ஸானி விளையாடி அந்த போட்டியில் என்னமோ அவரது அணி வெற்றி பெறவில்லை,ஆனால் ஹஸ்ஸானி தன் லவ் வாழ்க்கையில் கோல் அடித்துவிட்டார் வாழ்த்துக்கள் ஹஸ்ஸானி சீக்கிரம் கல்யாண செய்தி சொல்லுங்க.