காதலிக்காக இளவரசியை நிராகரித்த கால்பந்து வீரர்? வைரலாகும் வீடியோ
கால்பந்து வீரர் கேவி, தனது காதலிக்காக ஸ்பெயின் இளவரசியை நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பெயின் இளவரசி
ஸ்பெயினைச் சேர்ந்த 20 வயதான கால்பந்து வீரர் கேவி (Gavi), பார்சிலோனா கிளப் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
ஸ்பெயினின் மன்னர் ஆறாம் பெலிப்பெயின் மகளான இளவரசி லியோனரும், கேவியும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கபட்டது.
2022 ஆம் ஆண்டு, மன்னர் ஃபெலிப், இளவரசி லியோனருக்காக, கேவியிடம் இருந்து கையொப்பமிடப்பட்ட ஜெர்சியைப் பெற்றதாக தகவல் வெளியானது.
மேலும், யூரோ 2024 வெற்றிக்குப் பிறகு, ஸ்பெயின் கால்பந்து அணியை சர்சுவேலா அரண்மனையில் அரச குடும்பத்தினர் கௌரவித்தனர்.
இளவரசி நிராகரிப்பு
அப்போது, கேவியும், இளவரசி லியோனரும் கைகுலுக்கு பேசும் வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து, இருவரும் காதலித்து வருவதாக பலரும் நம்ப தொடங்கினர்.
இந்நிலையில், கேவி இளவரசி லியோனரை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Our warrior Gavi with his girlfriend ❤️pic.twitter.com/iUhegpmZVS
— Barça Worldwide (@BarcaWorldwide) May 18, 2025
கேவி, அனா பெலாயோ என்ற பெண்ணை ஏற்கனவே காதலித்து வருகிறார். கேவி தனது காதலியை கட்டி அணைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.