கால்பந்து உலகின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி

tests positive leonel messi covid confirmed
By Swetha Subash Jan 02, 2022 01:52 PM GMT
Report

கால்பந்து உலகின் ஜாம்பவானாக விளங்கும் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கால்பந்து உலகில் அசைக்க முடியாத ஒரு ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் மெஸ்ஸி. அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த இவர் 2004 ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார்.

பார்சிலோனா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் மெஸ்ஸி உள்ளார். அவர் அந்த அணியுடனான தனது 21 வருட உறவை கடந்த ஜூன் மாதம் முடித்து கொண்டார்.

அதன்பின்னர் பாரீஸ் செயிண்ட் ஜெர்மெயின் அணியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் பாரீஸ் செயிண்ட் ஜெர்மெயின் அணி தற்போது பிரஞ்சு லீக் தொடரில் விளையாட உள்ளது.

இதற்காக வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மெஸ்ஸி உள்ளிட்ட 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

புத்தாண்டில் முதல் வாரத்தில் கால்பந்து ரசிகர்களுக்கு இது பெரிய சோகமான செய்தியாக அமைந்துள்ளது.

நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது தொடர்பாக பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதில் அவர் விரைவில் நலம்பெற்று வர வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.