என் மகள் இல்லையே என்ற குறைதான் - பிரியாவின் தந்தை பேட்டி

By Irumporai Nov 17, 2022 09:31 AM GMT
Report

தனகு மகள் இறந்த பிறகு தமிழக அரசு நிறைய உதவி செய்துள்ளது என மாணவி பிரியாவின் தந்தை கூறியுள்ளார்.

மாணவி உயிரிழப்பு

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி பிரியா, இவர் கால்பந்து வீராங்கனை சிகிச்சை சென்ற இவர் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவியின் உயிரிழப்பிறகு மருத்துவர்களின் அலட்சியம்தான் காரணம் என்பதை கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் அந்த மருத்துவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

என் மகள் இல்லையே என்ற குறைதான் - பிரியாவின் தந்தை பேட்டி | Football Player Priyas Father Press Meet

இந்த சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இற்ந்த மாணவி பிரியாவின் இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து ரூ.10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலை, பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலைக்கான ஆணை, வீடு ஆகியவற்றை வழங்கினார்.

என்மகள்தான் இல்லை

இதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாணவி பிரியாவின் தந்தை ரவிக்குமார் கூறியதாவது: என் மகள் பிரியா இறந்துவிட்டாள். முதலமைச்சர் என்னிடம், நம்ம பிரியாவை போல நிறைய குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு உதவி செய்யுங்கள்

அதன் மூலம் பிரியாவின் ஆத்மா சாந்தி அடையும் என்று கூறினார் மேலும் தனது குழந்தை இறந்த பிறகு, தமிழக அரசு நிறைய உதவிகள் செய்துள்ளது.

வேறு எந்த குறையும் இல்லை. என் குழந்தைதான் போய்விட்டாள். அதுதான் வருத்தமாக உள்ளது எனக் கூறினார்.