கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் - டாக்டர்களிடம் ரகசிய விசாரணை!
கால்பந்து வீராங்கனை பிரயா மரண விவகாரத்தில் மருத்துவர்களிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.
பிரியா மரணம்
சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த பிரியா(17) அண்மையில் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் மாணவி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகியுள்ளது.
இதை தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி தனது வீட்டின் அருகே உள்ள கொளத்துார் அரசு புறநகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மாணவிக்கு மருத்துவர்கள் அடங்கிய குழு செய்த பரிசோதனையில், காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
ரகசிய விசாரணை
தொடர்ந்து அவரது கால் அகற்றப்பட்டது. அதன்பின் சிகிச்சையில் இருந்து வந்த பிரியா உயிரிழந்தார். இவருக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதுகுறித்து தற்போது ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நடத்தப்பட்ட இந்த விசாரணை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு பின்னர் அந்த வீடியோ பதிவு ஆதாரம் பிளாஸ்டிக் கவரில் மூடி சீல் வைக்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வரும்போது, இந்த வீடியோ ஆவணம் சமர்ப்பிக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.