கால்பந்து வீராங்கனை உயிரிழப்புக்கு காரணம் இதுதான் : அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்

Ma. Subramanian Crime
By Irumporai Nov 15, 2022 03:40 AM GMT
Report

மாணவி பிரியாவின் உயிரிழப்பிறகு காரணமான இரண்டு மருத்துவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காலில் அடிபட்ட வீராங்கனை

கால்பந்தாட்ட விராங்கனை பிரியாவுக்கு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி ஜவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பின் பிரியாவுக்கு ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டதால் வலது கால் அகற்றப்பட்டது.

கால்பந்து வீராங்கனை உயிரிழப்புக்கு காரணம் இதுதான் : அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல் | Football Player Of Minister M Subramanianm

மாணவி உயிரிழப்பு

இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அமைச்சர் விளக்கம்

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் கவனக்குறைவு தான் மாணவி பிரியாவின் உயிரிழப்புக்கு காரணம். கவனக்குறைவாக செயல்பட்ட இரண்டு மருத்துவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், பிரியாவின் சகோதரர்கள் மூவரில் ஒருவருக்கு அரசு வேலைக்கான உத்தரவாதம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.