கால்பந்து வீரரை தாக்கிய மின்னல்; உறைந்த பார்வையாளர்கள் - அதிர்ச்சி வீடியோ!
கால்பந்து வீரரை மின்னல் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்கிய மின்னல்
இந்தோனேசியா, பாண்டங் மற்றும் சுபாங் அணிகளுக்கு இடையே சிலிவங்கி மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண மைதானத்தில் ஏராளமானோர் கூடியிருந்தனர்.
அப்போது, திடீரென்று சுபாங் அணியைச் சேர்ந்த செப்டியன் ரகர்ஜா என்ற வீரரை மின்னல் தாக்கியது. இதில் நிலை குலைந்து சுருண்டு விழுந்தார். இதனை பார்த்த சக வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கால்பந்து வீரர் பலி
உடனே அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
??A horrible incident in Indonesia, when a player was stroked by lightning, rushed to hospital and died shortly afterwardspic.twitter.com/3VVqwiSdzS
— BabaGol (@BabaGol_) February 12, 2024
கடந்த 12 மாதங்களில் கால்பந்து வீரர் மின்னல் தாக்கி மரணமடைவது இது 2வது முறை என அங்கு உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.