உலகக்கோப்பை வென்று கொடுத்த கால்பந்து ஜாம்பவான் காலமானார் - ரசிகர்கள் சோகம்!
ஜெர்மனி கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரும், ஜாம்பவானுமான ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் காலமானார்.
ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர்
ஜெர்மனி கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரும், ஜாம்பவானுமான 'ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர்' தனது 78 வயதில் காலமானார். 1965 முதல் 1977 வரை ஜெர்மனி அணிக்காக விளையாடிய இவர், 103 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
[HQMHFN[
அதில் 3 முறை உலகக் கோப்பை தொடரிலும், 2 முறை யூரோ கோப்பை தொடரிலும் பங்கேற்று விளையாடி உள்ளார். கடந்த 1974-ல் இவர் தலைமையிலான ஜெர்மனி அணி உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது.
ரசிகர்கள் அதிர்ச்சி
மேலும், கடந்த 1990-ல் உலகக் கோப்பை ஜெர்மனி வென்றபோது, அந்த அணியின் பயிற்சியாளராகவும் ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் இருந்துள்ளார்.
இவர் யூரோ கோப்பை மற்றும் Ballon d'Or விருதையும் வென்றுள்ளார். அவரது மறைவுக்கு முன்னாள் மற்றும் இந்நாள் கால்பந்தாட்ட வீரர்கள், ரசிகர்கள் என உலகம் முடிவதிலிருந்தும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.