கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஒரே ஒரு செயல் - கொக்க கோலா நிறுவனத்திற்கு 4 பில்லியன் டாலர் நஷ்டம்! ஆத்தாடி!

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்த ஒரே ஒரு சம்பவத்தால் கொக்கோ கோலா நிறுவனத்திற்கு 4 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யூரோ சாம்பியன் 2021 தொடர் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது இதில் பல முன்னணி அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது.

இதன் ஒருபகுதியாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்தியாளர்கள் சந்தித்தார்.

அப்போது தன் முன் இருந்த கொக்ககோலா பாட்டிலை ஓரத்தில் வைத்து ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு கொக்ககோலாவிற்குப் பதில் தண்ணீர் குடிக்குமாறு அறிவுறுத்தினார்.

அந்தக் காணொளியும் புகைப்படமும் சமூக வலைத்தளங்களான காட்டுத்தீயாக பரவியது.

இந்த சம்பவத்தின் காரணமாக கொக்ககோலா நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 29,377 கோடி ரூபாயும், அமெரிக்க மதிப்பில் 4 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. . 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்