Look at this Goal... - உலக கால்பந்து மைதானத்தில் சிறுவன் எறிந்த காகித ராக்கெட் அடித்த கோல் - வைரலாகும் வீடியோ...!
உலக கால்பந்து மைதானத்தில் சிறுவன் எறிந்த காகித ராக்கெட் ஒன்று கோல் அடித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உலக கால்பந்து போட்டி -
4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.
சிறுவன் எறிந்த காகித ராக்கெட் அடித்த கோல்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உலக கால்பந்து போட்டி மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது.
அப்போது, சிறுவன் ஒருவன் காகித ராக்கெட் ஒன்றை செய்து கால்பந்து போட்டி நடக்கும் மைதானத்தில் தூக்கி எறிந்தான். அந்த காகித ராக்கெட் பறந்து வீரர்களிடையே பறந்து சென்று கால்பந்து வலையத்தில் சென்று கோல் அடித்ததுபோல் விழுந்தது.
இதை உற்று உன்னிப்பாக பார்த்த மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து கைதட்டினர். காகித ராக்கெட் விட்ட சிறுவனுக்கோ மகிழ்ச்சி தாங்க முடியாமல் சந்தோஷத்தில் துள்ளி குதித்தான்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் அச்சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Look at this Goal…?#FIFAWorldCup2022 pic.twitter.com/HmpXev67G9
— Javed Iqbal (@JavedIqbalReal) November 24, 2022

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Ethirneechal: விஷமருந்தி உயிருக்கு போராடும் விசாலாட்சி... கதறி துடிக்கும் குடும்பம்! சூடுபிடிக்கும் எதிர்நீச்சல் Manithan
