உலக கோப்பை கால்பந்து : ஸ்பெயினை வீழ்த்தி முதல்முறையாக காலிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ...!

Football Viral Video Spain FIFA World Cup Qatar 2022 Morocco
By Nandhini Dec 07, 2022 06:51 AM GMT
Report

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி கால்இறுதிக்குள் மொராக்கோ நுழைந்துள்ளது.

உலக கோப்பை கால்பந்து தொடர் -

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.

கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும். உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது.

இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.

football-morocco-celebrates-win-spain

ஸ்பெயினை வீழ்த்திய மொராக்கோ

நேற்று இரவு எஜூகேசன் சிட்டி மைதானத்தில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 2-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் ஸ்பெயின், மொராக்கோ அணி நேருக்கு நேர் மோதியது. இப்போட்டியில் 90 நிமிட ஆட்டத்தில் கோலின்றி சமனில் முடிந்ததால் 30 நிமிடங்கள் கூடுதல் நேரமாக ஒதுக்கப்பட்டது.

கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் எதிரணியின் கோல் கம்பத்தை சூழ்ந்து தாக்குதல் நடத்தினாலும் கோல் வலைக்குள் பந்தை அடிக்க முடியவில்லை. கூடுதல் நேரத்திலும் சமநிலை நீடித்ததால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கபட்டது.

இதனையடுத்து, மொராக்கோ அணி தனது முதல் 4 வாய்ப்புகளில் மூன்றை கோலாக்கி அசத்தியது. அந்த அணியின் அப்டெல்ஹாமிட் சபிரி, ஹகிம் ஜியேச், அச்ராப் ஹகிமி ஆகியோர் தங்கள் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தினர். 3-வது வாய்ப்பில் பாத் பினோன் அடித்த பந்தை ஸ்பெயின் கோல் கீப்பர் தடுத்து நிறுத்தினார்.

ஸ்பெயின் அணி தங்களது கிடைத்த முதல் 3 வாய்ப்புகளில் கோல் அடிக்க முடியாமல் தோல்வியை தழுவியது.

இதனையடுத்து, பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் மொராக்கோ அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை சாய்த்து முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.