கால்பந்து ஜாம்பவான் பீலே மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கால்பாந்து ஜாம்பவான் பிலே
சர்வதேச போட்டியில் அதிக கோல்கள் கால்பாந்து போட்டிகளில் ஹீரோவாக வலம் வந்தவர் பிலே. இவரின் முழு பெயர் எட்சன் அரான்டெஸ் டோ நாசிமெண்டோ. இவர் சர்வதேச போட்டியில் அதிக கோல்கள் அடித்து மகுடம் சூடியவர். அதிக கோல்கள் அடித்த தரவரிசையில் இவர் 10-வது இடத்தில் உள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், பீலே உடல் நலக்குறைவால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு பிலேவிற்கு பெருங்குடலில் சிறிய கட்டி (புற்றுநோய் ) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அக்கட்டி அகற்றப்பட்டது. இதனையடுத்து, பலவீனமான உடல்நலத்தால் பாதிக்கப்பட்டு வந்த பிலே, நேற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவரது மகள் கெல்லி நஸிமென்டோ இன்ஸ்டாவில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், என் தந்தைக்கு பெருங்குடல் பகுதியில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும், டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், விரைவில் குணமடைவார் என்று பதிவிட்டுள்ளார்.
பீலே உடல் நலம் பெற வேண்டி அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
? Pele's daughter, Kely Nascimento, has confirmed her dad is in hospital, but says "there are no surprises or emergencies" and that he's "regulating medication" for his cancer. ?
— Transfer News Live (@DeadlineDayLive) November 30, 2022
(Source: @BenJacobs) pic.twitter.com/LtLstsGUBQ
Brazilian football legend Pele was re-admitted to Albert Einstein hospital on Tuesday with reports claiming that he was suffering from swelling all over his body.#WorldCupMtaani #Brekko pic.twitter.com/Qvq9L8gTm6
— Ghetto Radio (@GhettoRadio895) December 1, 2022