கவலைபடாதீங்க நான் சீக்கிரமாவே வருவேன் : மாணவியின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்..கதறும் நண்பர்கள்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமையில் வலது கால் அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா இன்று உயிரிழந்தார்.
மாணவி உயிரிழப்பு
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து செய்தியாளட்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீராங்கனை பிரியாவுக்கு, ரத்த நாளங்களில் தொடர் பாதிப்பு இருந்தது. சிறப்பு மருத்துவர்கள் குழு மூலம் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளித்தோம்.
நேற்று அவருக்கு சிறுநீரக பாதிப்பு, இருதய பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, இன்று காலை அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த இழப்பு, ஈடுசெய்ய முடியாத ஒன்று. பெரியார் நகர் மருத்துவமனையில் 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வைரலாகும் வாட்ஸ் அப் பதிவு
இந்த நிலையில் மாணவி உயிரிழப்பதற்கு முதல் நாள் வைத்திருந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதில், அனைத்து நண்பர்கள், உறவினர்களுக்கும், நான் சீக்கிரமாகவே ரெடி ஆகி மீண்டு வருவேன்
அதனால் யாரும் கவலை படாதீர்கள் மாஸா வருவேன். எனது விளையாட்டு என்னை விட்டு எப்போதும் போகாது. நீங்கள் நான் வருவேனு நம்பிக்கையோடு காத்திருங்கள் என நம்பிக்கையுடன் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த பலரும் மருத்துவர்களின் அலட்சியத்தால் ஒரு இளம் வீராங்கனையின் உயிரி பறி போய் உள்ளதாக வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.