இணையதளத்தை கலக்கும் மெஸ்ஸியின் மேஜிக் கோல்கள்... - தெறிக்க விடும் ரசிகர்கள்...!

Lionel Messi Football Viral Video
By Nandhini Dec 16, 2022 07:39 PM GMT
Report

உலக கோப்பை கால்பந்து - 2022 போட்டியில் மெஸ்ஸி அடித்த மேஜிக் கோல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

உலக கோப்பை கால்பந்து தொடர் -

4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டு விளையாடின.

32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் விளையாடி வந்தது. இந்நிலையில், இறுதிப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணி நுழைந்துள்ளது.

இறுதிப்போட்டியில் முட்டப்போகும் பிரான்ஸ் - அர்ஜென்டினா

உலக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியின் இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் நாளை மறுதினம் கோதாவில் நேருக்கு நேர் மோத உள்ளன.

foot-ball-lionel-messi-goal-viral-video

மெஸ்ஸியின் மேஜிக் கோல்கள் -

இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து - 2022 போட்டியில் மெஸ்ஸி அடித்த மேஜின் கோல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் இறுதிப்போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.